“நாங்கள் ஆட்சிக்கு வந்தால்”

“The first method for estimating the intelligence of a ruler is to look at the men he has around him.”
Niccolò Machiavelli, The Prince

ஆங்கிலத்துல எழுத ஆரமிக்க தயக்கமா இருந்தது. பரவால.. சில விஷயங்கள்  மொழிமாற்றத்துல தொலஞ்சுரும்னு விட்டுட்டேன்.

மாக்கியவல்லிக்கு கட்டுரை முடியறப்ப வரலாம். First things first.

உங்களுக்குள்ள சில கேள்வி கேளுங்க.
* ஒரு அரசியல்வாதியா இந்த நாட்ட, நாட்டு மக்கள, ஒரு தேர்தல எப்படி பார்ப்பீங்க?
* உங்களோட சக அரசியல்வாதிகள் கிட்ட என்ன பேசுவீங்க?

பச்சையா சொல்லனும்னா புழுவா கூட மதிக்கமாட்டீங்க இந்த மக்கள.. இல்லயா? ஏன் எதுக்கு எல்லாம் அப்பறம் பேசலாம். இதான் நிதர்சனம்.

அரசியல்வாதிகள் மக்களை மதிப்பதில்லை.

என்ன பொறுத்தவர இதுதான் மொத பிரச்சன. நாம அரசியல்வாதிகள மதிக்கறதில்ல. அவங்க நம்மள மதிக்கறதில்ல. “அரசியலின் மீதும் அரசியல் பழகுபவர் மீதும் மரியாதை கொள்வதே ஒரு சமுதாயத்தின் முதற்கடமையாக இருக்க வேண்டும். மக்களின் மரியாதையை பெற்ற அரசியல்வாதி அதை இழக்காமல் இருக்க துடிக்க வேண்டும்”.

மரியாதை:
கல்வி, ஞானம், நேர்மை, பேரன்பு, பற்று, வீரம். இந்த மாதிரியான ஒரு புறநானூற்று பாடுபொருளுக்கு இணையான பண்புகளை கொண்ட ஒருவர் ஈர்க்கும் தன்மையே மரியாதை என்பது. சகாயத்தின் நேர்மை பால் மக்கள் கொண்ட மரியாதை. நடிகர் சித்தார்த், பாலாஜி போன்றோர் சமூகத்தின் மீது கொண்ட பேரன்பின் மேல் மக்கள் கொண்ட மரியாதை. நாட்டை காக்க எல்லையில் உயிரிழக்கும் ஒவ்வொரு இராணுவ வீரனின் வீரத்தின் பால் மக்கள் தன்னெழுச்சியாய் மனம் நெகிழும் மரியாதை.
இது போன்ற மரியாதை – அந்த எதிர்பார்ப்பால் உந்தப்படும் தனிமனிதர்களின் எழுச்சியே நான் எதிர்பார்க்கும் அரசியல்.

வேற மாதிரி சொல்றேன் கேளுங்க.. எப்படி இராணுவத்துல சேரனும்னு ஒரு பதின்பருவ வயது “ஆண் / பெண்”ணுக்கு ஆசை வருது? சமூகம் இராணுவத்தை ஒரு மரியாதையுடன் நடத்துவதால் தான?

அரசியல்வாதிகள் மக்கள ஏன் மதிக்க கூடாதுன்னு காரணம் நான் சொல்றேன்.

இதே May மாசம். 2009. இந்த தமிழ் சமுதாயத்தோட மிகப்பெரிய தோல்வி இலங்கைல இத்தன தமிழர்கள இறக்க விட்டது. ஆட்சி, ஊடகம், அதிகாரம் இது எல்லாத்தையும் பயன்படுத்தி தமிழக மக்களுக்கு உண்மை நிலவரத்த மறைக்கறதுல இருந்து, உண்மைய சொல்றவங்க வாய அடைச்சு, சிறையிலிட்டு, Congress ஆட்சியோட படுகேவலமான கொள்கைக்கு லச்சம் உயிர்கள  கூட்டிகொடுத்தவனுக்கு ஓட்டு போட தயாராகுற ஒரு சமுதாயத்த எந்த அரசியல்வாதி மதிக்க முடியும்?

இந்த “string of pearls”, இந்திய பெருங்கடல்ல China-ஓட ஆதிக்கத்த அடக்குற tactical policy அது இதுனு எந்த எளவு வெங்காயமும் கெடயாது.

என்ன காரணம்னு என்னோட இன்னொரு பதிவுல விரிவா எழுதிருக்கேன்.  என்னால முடிஞ்ச அளவு சுருங்க விளக்க முயற்சி பண்றேன். இலங்கைல எந்த அளவு கனிம வளம் இருக்கோ அதே அளவு கடல் வணிக வளமும்(?) இருக்குது. ஒண்ணுமே இல்லாத சிங்கப்பூர் எப்படி இவ்ளோ சம்பாதிச்சது. இங்க பாருங்க.

சீனா < – > அமெரிக்கா, சீனா < – > ஈரோப்பா, மத்திய கிழக்கு < – > சீனா. இதுதான் இன்னிக்கு நிலவரத்துல உலகப்பொருளாதாரத்தோட முதுகெலும்பா இருக்க முக்கியமான கடல்வழி வர்த்தகப்பாதை. இது இல்லாம இப்போ சீனா “One Belt – One Road”னு ஒரு வர்த்தகப்பாதைக்கு வழி போட்டுக்கிட்டுருக்கு (as seen below).

{ credits: https://www.clsa.com/special/onebeltoneroad/ }

இலங்கை இது எல்லாத்துலயும் முக்கியமான மையம். இலங்கை அரச கையில போட்டுக்கிட்டா நம்மூரு நிறுவங்களுக்கு கொள்ளை லாபம். என்னோட பழைய பதிவுல சொன்ன மாதிரி இந்த நிறுவனங்கள் மூணு விதமா சம்பாதிக்கலாம்.

* இலங்கையோட கனிம வள நிர்வாகத்த எடுத்துக்கறது.

* இந்திய நிறுவனங்கள் சும்மாகாச்சும் இருக்க இலங்கை நிறுவனங்கள் (paper boats) கூட சேர்ந்து Conglomerate உருவாக்கறது. ஆதாயம் என்னன்னா இங்க சுரண்டரத அங்க இருக்க கிளைக்கு அனுப்புறது. அங்கருந்து நான் முன்னாடி சொன்ன routesல shipping. அப்புறம் அங்க இறக்குமதி பண்ற சரக்க அவன் இந்திய கிளைக்கு அனுப்புறேன்னு அனுப்புறது. ஒரு சின்ன trade agreement போடறது. இந்திய – இலங்கை புரிதல் ஒப்பந்தந்தின்படி நமக்குள் நடக்கும் ஏற்றுமதி – இறக்குமதிக்கு வரி அவசியமில்லை. முடிஞ்சு போச்சு. இந்திய அரசாங்கத்துக்கு வரியே கட்டாம இந்த பெரு நிறுவனங்கள் வளச்சு சம்பாதிக்கும். அப்புறம் இருக்கவே இருக்கு tax havens.

* மூணாவது கொஞ்சம் நேரடியான விஷயம். இந்திய பொருள்களுக்கு இலங்கைல இருக்க market-அ புடிக்க வேண்டியது.

என்னோட பழைய பதிவுல பாலாஜி (@prbonline) comment பண்ணிருந்தாரு. சேது சமுத்திர திட்டம் வந்திருந்தா இலங்கைய சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லன்னு. ஒரு சின்ன Suez Canal அது. சீனா எண்ணெய் வளத்துக்காக தென் சீன கடல்ல அராஜகம் பண்ணிகிட்டு கெடக்கு. கடலுக்குள்ள மன்ன கொட்டி ஒரு செயற்கை தீவ உருவாக்கி வெச்சுருக்கு. உங்களோட நிலப்பரப்புல இருந்து 13.8 மைலுக்குள்ள இருக்க கடல் உங்களுது (ஏன் நம்ம கச்சத்தீவ மீட்கணும்?)ன்னு UN சொல்லுது. சீனா (being china) ஒரு நிலப்பரப்ப உண்டு பண்ணி கூடாரதுக்குள்ள தலைய நுழைக்குது. நாம என்னடானா ஒரு canal கட்ட முடியாம கெடக்கோம்.

இதுக்கும் நம்ம பதிவுக்கும் என்ன சம்மந்தம்னு கேளுங்க.

1) Congress ஆட்சியின் இலங்கை (மட்டுமா?) வெளியுறவுக்கொள்கை முற்றிலும் பெரு-நிறுவனங்கள் நிர்ணயித்தது. அந்த பெரு நிறுவனங்கள் எதுவும் அரசாங்கத்துக்கு வரி கட்டப்போவதில்லை. In other words, We have been fucked. நமது எனத்தலைவர் கட்டுமரம் அவர்கள் இந்த பெரு-நிறுவனங்கள் காசு பாக்க நமது உறவுகளின் உயிரை விலைபேசி முடித்தார்.

இன்னொரு வேல பாத்தான் பாருங்க.. அம்மா! நம்ம பாலாஜி சொன்ன அந்த சேது சமுத்திர திட்டம் (அரைகுறை திட்டம்) இருக்கே. அதுக்கு ஒரு வழியா ஒரு அமவுண்டு ஒதுக்குனாய்ங்க. 4000 கோடி. அதுல எக்கச்சக்கமா ஏப்பம் விட்டது யார் தெரியுமா? நம்ம TR Baalu, அப்பறம் அவரு புள்ளையாண்டான் (மன்னார்குடி வேட்பாளர், TRB Raaju??). இதுல கட்டுமரத்துக்கு காணிக்கை என்ன ஏதுன்னு நமக்கெங்க தெரியப்போது?

2) ஒரு சர்வதேச கடல் வழி வர்த்தக மையத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பும் ஒரு முக்கியமான திட்டத்திலும் ஊழல்.

தூத்துக்குடிய சர்வதேச கடல் வழி வர்த்தக மையமா மாத்திருந்தா நம்ம காங்கிரஸ் அரசு இலங்கைல இத்தன தமிழர்கள் கொல்லபடுறதுக்கு துணை போயிருக்காது.

இப்படிப்பட்ட ஒரு ஆள இவ்வளவு நாள் ஆட்சில வச்சிருந்தது மட்டுமில்லாம திரும்ப அந்தாளுக்கே ஒட்டு போட தயராகுற ஒரு சமுதயத்த எப்படி ஒரு அரசியல்வாதி மதிக்க முடியும் சொல்லுங்க?

மக்கள் அரசியல்:

இவ்வளவு கோர்வையான சம்பவங்கள மக்களுக்குள்ள எடுத்துகிட்டு போறது கஷ்டம். மக்கள் மதிக்கும், மக்களை மதிக்கும் அரசியலை கேளுங்கள். அவ்வளவுதான். மாக்கியவல்லி சொல்றபடி ஒரு ஆட்சியாளரின் மதிப்பு (மரியாதை இல்ல. value) அவரை சுற்றியிருப்பவர்களின் மதிப்பு. அதாவது சொந்தக்காரன், தோழி, மந்திரிகள் எல்லாம். சொந்தக்காரன் பக்கத்துல இருக்கக்கூடாதா.. ஓட்டு போடாதீங்க. தோழி கீழி எல்லாத்துக்கும் இதே கதிதான். அமைச்சர்கள் விஷயத்துக்கு கடைசியா வரலாம். எந்த கட்சியுமே சரியில்ல. அதுவுமில்லாம கட்சி, கொள்கை எல்லாம்.. வேணாம்.. அத பத்தி பேசக்கூட வேணாம்.

இந்த தேர்தல்ல மக்களுக்கு ஒரு வாய்ப்பு உண்டாயிருக்கு. அவனுக்கு இவன் பரவாலங்குற மனநிலை உருவாக்கின தேக்கத்துக்குல இப்ப அரசியல் வறட்சி ஏற்பட்ருக்கு. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றா ஒரு தலைமை பண்புள்ள கட்சியமைப்பு இல்ல. நாம் தமிழர் மாதிரி ஒரு fundamental extremism எல்லாம் தமிழ்நாட்டோட RSS மாதிரி. அப்பறம் உங்க இஷ்டம்.

அமெரிக்க அரசியலில் இது ஒரு முக்கிய கட்டம். GOP (Grand Ole’ Party) என்ற moniker பெற்ற republican கட்சியின் வேட்பாளர் Donald Trump என்ற ஒரு முக்கியப்புள்ளி. நமது விஜயகாந்த் வகையறா (என்றால் அது மிகையாது). Democrat கட்சியின் வேட்பாளராக (வேட்பாளர் ஆவதற்கே(!)) போட்டியிடும் Hillary Clinton மற்றும் Bernie Sanders. Hillary Clinton நமது அம்மா வகையறா. Bernie Sanders.. 50 பேர் கூடிய ஒரு நிகழ்வில் தனது அரசியல் கொள்கையை (socialistic democracy) முன்வைத்து Democratic Partyயின் வேட்பாளராக களம் இறங்கிய Bernie இன்று அமெரிக்காவின் அரசியல் கட்டமைப்பையே சீரமைத்து வருகிறார். ஜெயிக்கிறாரோ இல்லையோ. அவரது கருத்துக்கள் (அத்தனையும் முத்து) இன்று அமெரிக்க மக்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் எதிரொலிக்கிறது. Phenomenal. இந்த முன்னுரை அவரை பற்றிய ஒரு சின்ன கருத்தை முன்னிட்டு.

“You know, oftentimes in politics we talk about a candidate rising to meet the moment,” says Neil Sroka with the progressive grass-roots group Democracy for America, which has endorsed Sanders. “But in this case I think what we’ve seen in this election is the moment meeting a candidate: Bernie Sanders, who has literally been fighting on income inequality issues from the very start of his career.”

“சில வேட்பாளர்கள் ஆச்சரியமாக அந்த கணத்தின் அரசியல் கேள்விகளுக்கு பதிலாய் எழுச்சி பெறுவதுண்டு (அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்.). Bernie Sanders(இன் கொள்கைகள்) பொருட்டு ஒரு புதிய அரசியலே எழுச்சி பெற்று நிற்கிறது”.

நமக்கு ரெண்டுமே இல்ல. இந்த கணத்துக்கான அரசியல்வாதியும் இல்ல.. நம்மளோட அரசியல திருத்தி எழுதுற ஒரு தீர்க்கமான அரசியல்வாதியும் இல்ல..

இது எதுவுமே இல்லாத நம்மகிட்ட ரெண்டு கருவிகள் இருக்கு.
1) தகவல்.
2) ஓட்டு.

உங்களோட தொகுதில இருக்க ஒவ்வொரு வேட்பாளரையும் புடிங்க. http://myneta.info/tamilnadu2016/ ல கொஞ்சம் வரலாறு இருக்கு.

யாரையுமே புடிக்கலன்னா 49 ஓ தான். இந்த அதிருப்தி பதிவு செய்யப்பட்டா தான் நம்ம மதிக்கிற, நம்மள மதிக்கிற ஒரு தனிமனுஷன் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கு.. மத்தபடி இந்த தேர்தல் நமக்கு நம்மளோட அதிருப்திய பதிவு செய்ய ஒரு வாய்ப்பு.. அவ்வளவுதான்.

நான் ஆரமிச்சு வக்கிறேன்.. வேற யாருமில்ல.. நம்ம ராசு.. http://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=1464

ஒரு பார்வையாளனாக, கையாலாகதவானாக ஒரு இனப்படுகொலையயும் இந்த தேர்தலையும் பார்க்கும் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த எனக்கு எந்த தகுதியும் இல்லை. இருந்தும் சொல்கிறேன். திமுக ஆளும் ஒரு மாநிலத்தை எனது மண்ணாக என்னால் சகிக்க முடியாது..

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s