திரையிசைத்தமிழ்.எனது வாழ்வும் அனத்தலும்

ஏனோ வானிலை மாறுதே னு ரஹ்மான் இழைச்சுருக்காரு. இசை! நான் ஒரு ஞானசூன்ய இசை ரசிகன். மண்டைக்குள்ள ஆடிட்டு இருப்பேன். That’s my process of getting addicted to a song. ஹோசானாக்கு நான் choreograph பண்ண ஒரு routine இருக்கு.

அந்த பாட்ட எந்த அளவு அனுபவிச்சேனோ தெரில.. choreo செம்ம அழகா வந்தது. ஒரு teenage வாண்டு “That was sexily amazing”னு comment போட்டு தோழியும், அப்போதைய காதலியும் செம்மையா கலாய்ச்சாங்க. ஒரு வர்ஷத்துக்கு மேல ஆச்சு. போன வாரம் தோழி “Its been so long. Felt so good to watch this. Goosebumps all over”னு whatsappல சொன்னா.. she was referring to the video. காதலியுடன் ஹோசானா பாட்டிற்கு நடனமாடிய கொடுத்துவைத்த அழகியல் சார் காதல் எனக்கு வாய்த்திருந்தாலும் பிரிவாற்றாமையில் துவழும் ஒரு சராசரி ஆணாக நான் இருந்து தொலைப்பதால் அவள் சார்ந்த எந்த பதிவுகளும் என்னிடம் இல்லை. அதனாலதான் ஒரு instagrammed shortclipஅ வெச்சு “இவன் நல்லா தான் choreo பண்ணிருப்பான்” அப்படிங்குற ஒரு hypotheticalஅ நீங்க நம்பவேண்டிருக்கு. நீங்க அத நம்பினாதான் “ரீதிகெளளைல கௌரிய நொளச்சு மத்யமால fail ஆகி பரிக்சயால pass ஆகி”னு எல்லாம் எழுதத்தெரியாதவனும் ஒரு பாட்டயே காதலிக்குற அளவுக்கு ரசிகத்தன்மை நிறைந்தவனா இருப்பான் அப்படிங்குற logical extensionக்கு வரமுடியும்.

வந்தாச்சா?
வந்துட்டீங்கன்னு நம்பி கவிஞர் தாமரையோட இந்த facebook (முகப்புதகம்? seriousஆ[1] வா? ) பதிவுல  என்னோட கருத்திடுகைய நான் இங்கயும் போட்டு வைக்கறேன். This needs to be recorded.

* Comment Begins*

முதுகின் மேலே
விழுவதினாலே…
வரிவரிக் கவிதை.

இந்த மூணு வரிக்குள்ள இருக்க disconnect, distortion எல்லாம் வியப்பா இருக்கு.. Oh My God! அப்படிங்கறமாதிரி.. நான் இந்த பகுதிய சரியா புரிஞ்சுருந்தேன்னா ஒரு சின்ன destruction பண்ணி, இன்னொரு (சுமாரான) ஹைக்கூ(மாதிரி) வரவைக்கலாம்..
/
பிரிவாற்றாமை:
“நொடிகள் கசையடி
முதுகினில் விரிந்தது.
வரிக்கவிதை”..
/

இதுக்கு மேல எந்த அளவு இந்த கவிதை – பாடல ரசிச்சுருக்கேன்னு எனக்கு சொல்ல வராது.. அப்படி ஒரு ரசிகனா என்ன நெருடின ஒரு விஷயத்த சொல்றேன்.. I hope you are paying attention.

செம்ம காண்டா இருக்குங்க.. “மாஆஆஅட்டும் தான்.. பார்க்கிறேன்”னு சிஃத் ஸ்ரீராம் பாடுறப்போ. சந்தம் எக்கச்செக்க எடத்துல செயல்பட மறுக்குது.. முதல் தடவ கேட்கறப்போ ரொம்ப நெருடலா இருந்தது.. Complete discomfort.

The wanting of not compromising the poetic value is not lost on me. But where does this end?

“இது ஏதோ அரவேக்காடு திமிர்ல பேசுது”னு நெனச்சுராதீங்க.. இந்த Phenomenaவ “ஐ” பாட்டு வந்தப்பவே கவனிச்சாங்க சிலர். இப்ப எல்லா consumersஉம் அத தான் பேசுறாங்க.. சந்தம் சரியாவே இல்லன்னு.

சரி அதையும் விடுங்க.. any good artists will lead the way in shifting the consumer’s (listener’s) taste. ஆனா சந்தம் இல்லாம பாடினார்னு கம்பரயே கலாய்ச்ச ஊர் இது..

“நாராயணனை நராயண னென்றே கம்பன்
ஓராமற் சொன்ன வுறுதியால் – நேராக
வாரென்றால் வர்ரென்பேன் வாளென்றால் வள்ளென்பேன்
நாரென்றால் நர்ரென்பேன் நான்”
– காளமேகப்புலவர்.

/
For the uninitiated:
ஒன்னுல்ல. கம்பர் நாராயணன நராயணன்னு பாடிட்டாறு. ஏன்னா அந்த பா வகையோட விதிப்படி ( சீர், அடி, தளை et.al)னு இருக்கு.. கம்பர் ஒரு சின்ன freedom எடுத்துக்கிட்டாரு இந்த விதிக்குள்ள எழுதுனுமேன்னு.
/

உங்களுக்கு என் point தெளிவா புரிஞ்சுருக்கணும் இருந்தாலும் சொல்றேன்.. for the sake of being clear.

கம்பரயும் செல்லமா ஒரு தட்டு தட்டிருக்கார் அவரோட சமகாலப்புலவர் – நண்பர். எனக்கு தெரிஞ்சு (பெருமதிப்பிற்குரிய) பட்டுக்கோட்டைக்கும் கண்ணதாசனுக்கும் இதுமாதிரியான “peer review” இருந்தது. கடைசியா அய்யா வாலி அவர்களும் இது மாதிரியான verbal transactionsல இருந்தாரு. Healthyஆன விஷயம் இல்ல?

“தொட்டால் பூ மலரும்” பாட்ட இசைப்புயல் மீள்-இசையமைக்க, வாலி ஒரு எடத்துல (பழரச தோட்டம், பனிமலர் கூட்டம்) சந்தம் தட்டும்னு சண்ட போட்டிருக்கார். “ஆணவமா ரஹ்மான்?” ங்கற வரைக்கும் போயிருக்கு. அது அப்பறமா ‘பனிமலர் கூ.. கூ.. ட்டம்.. ட்டம்’னு சீரமைக்கப்பட்டத பாத்துட்டு மன்னிப்பும் கேட்டாரு. வாலிக்கு இந்த நவீன இசையோட வடிவம் தட்டுப்பட்டதுக்கு அப்புறமாதான் (innocent mistake) மன்னிப்பு கேட்ருக்காரு (பெரிய மனுஷன்).

நீங்களும், பிற கவிஞர்களும் (மதன் கார்க்கி – Please) ரஹ்மான் இத மாதிரி கொடுங்கன்னு கேட்டாலுமே எங்களுக்காக, தமிழுக்காக, இந்த எதிர்வினைய பதிவு செய்ங்க..

மாஆஆட்டும் தான் பார்க்கிறேன் வேற..
கூ.. கூ.. ட்டம்.. ட்டம் வேற..

மற்றபடி எனக்கு உங்க மேல படு பயங்கர மரியாத.. 2009 – 2010’கள்ல உங்களோட இலங்கைத்தமிழர் நலன் சார்ந்த கோபங்கள் எங்களை அடைந்ததில் இருந்து.

I apologize if I overstepped my boundaries.

* Comment Ends *.

We are back here. My Blog.

எனக்குன்னு ஒரு உலகம் இருக்கு, உங்களக்குன்னு ஒன்னு இருக்க மாதிரியே. எனக்கு தமிழ்னா கொள்ளைப்பிரியம். என்னதான் பீட்டரா வாழ்ந்தாலும் (toefl 116/120) எனக்குன்னு ஒரு cadence, என்னோட தமிழ்ல இருக்கு. I am very proud of that and I make it very visible.
Like my BMW Z4’s nameplate.

இதுல (my world) வார்த்தைகள்ல உணர்த்த முடியாத உறவுகள் உண்டு. Penpals in this hyperconnected web மாதிரி ஒரு விஷயம். அதோட intimacy வேற. ரகுசி, பிரபு, நட்டு, வெங்கிராஜா, அண்டோனி அன்பரசு, கவிஞர் கருப்பு அவர்கள், கொரிய நிருபன் மாதிரி bro நண்பர்களும்; மயில், சிக்மாஃபியா, riyazdentist, புதசெவி, msathia, rskumaran மாதிரி அண்ணன்களும், sricalifornia, lakshmi மாதிரி அக்கா அவங்களும் renu, ajitha, kannamma மாதிரி buddies. எனக்கும் ரகுசிக்கும், எனக்கும் பிரபுக்கும் எல்லாம் வித்தியாசமே சொல்ல முடியாத அளவு ஒற்றுமை இருக்கும். ரியாஸ் அண்ணன்லாம் என் ஊரு. என் best friend ஓட ஆதர்சம். சீக்கிரமா twitterக்கு வந்துருந்தா வதிலை மாநகர கலக்கிருக்கலாம். இன்னிக்கு என் வீட்ல எதாச்சும் situationன்னா ரியாஸ்ண்ணா இருக்காருங்குற ஒரு peace of mind இருக்கு. இவங்க எல்லார்ட்டயும் இருந்து நான் கத்துக்கிட்டது எல்லாம் என்ன என் வயசு பசங்கட்ட இருந்து மொத்தமா தள்ளி வெச்சுருச்சு. I am glad it did. அதுவும் twitterக்கு வந்த புதுசுல எனக்கு இருந்த திமிர்க்கெல்லாம் அளவேயில்ல.. I would have been like “poda mayirei” to my old self.. அப்படி ஓரு பீச பொறுத்துட்டு மயிலண்ணனும், சிக்மாஃபியா அண்ணனும் செம்மயா engage பண்ணாங்க. I learned how to disagree with someone’s point and respect them all the same. Something my peers would never learn for the next 10 years at least. அதுலயும் sicmafia எல்லாம் செம்ம பெரிய motivator. 172 pound பையன் 270 pound deadlift, 200 pound squatனு போயிட்டு இருக்கேன். He pretty much is the reason behind my getting fit.

I am drifting intentionally. Let me set up this stage to pay respects to this man. Kryes. Random article ஒன்னு படிச்சுட்டுருந்தேன். “கண்ணே கொஞ்சம் மூங்கில் சாப்பிடு”ன்னு சங்கத்தமிழ் யானக்காதல nchokkan பிழிஞ்சுருந்தாரு.

எனக்கு ஒரு பிரச்சன உண்டு. I like reading comments more than the post. Reddit வளர்த்துவுட்ட பழக்கம் இது. அன்னிக்கு அந்தப்பதிவுல comments sectionல ஒருத்தர் பூந்து விளையாடிருக்காரு. I am literally feeding off of the energy in his comments. Like I am chuckling. Romanticism meets Tamil meets high octane intellectualism. மெரண்டுட்டேன். அப்போ அவரு anon32 அப்படின்ற பேர்ல comments போட்டுருந்தார். எனக்குனா யாரிது அப்படின்னு செம்ம ஆச்சர்யம். இது மாதிரி ரெண்டு தடவ நான் உணர்ந்துருக்கேன். மொத தடவையா அரவிந் கண்ணையன் blog படிச்சப்போ.. அப்பறம் பிரபஞ்சக்குடில் படிச்சப்போ..

ஆனா இந்த தடவ நான் என்னோட ஆச்சர்யம் கலந்த மரியாதைய பகிர்றேன். In twitter of course. Raguc பாத்துட்டு அடுத்த நிமிஷம் அவரோட எழுத்துநடைய கண்டுபுடுச்சி எனக்கு mention போடறான், அவரயும் mention பண்ணி. அப்போ அவர் North Africa I guess, missionல இருக்காரு. ஒரு மூணு மாசம் கழிச்சு வந்து Hi சொன்னாரு. அந்த நிமிஷம் ஆரமிச்ச அந்த ஆச்சர்யம் கலந்த மரியாதை பெருகிகிட்டேதான் போகுது. அந்த comments எல்லாத்தையும் படிங்களேன் தெரியும்.

இந்த கதை எல்லாம் எதுக்குன்னு கேக்குறீங்களா?

நான் ஒரு அரகுற. காளமேகத்தோட diss track தான் தெரியுமே தவிர கம்பர் எதுல என்னா பண்ணி வெச்சாருன்னு எனக்கு தெரியாது. Try googling it yourself. என்ன search string போட்டாலும் அவா ஓட propaganda பதிவுகள் தான் வருதே தவர matter கெடைக்கல. கடல்லயே இல்லியாம்.

எங்கப்பாக்கு தெரிஞ்ச தமிழ் எல்லாத்தையும் எனக்கு கத்துக்கொடுத்துட்டாரு. நமக்கு போக்கிடம் ஒன்னு தான்.

That my dear readers, is the set up to introduce the man of the hour. Thanks for reading my rant log. உங்கள நெனச்சா பாவமாதான் இருக்கு. என்ன பண்ண? 🙂 வேற எதுனா அறச்சீற்ற தாழ்வு மண்டலம் சென்னைய (or newyork) நோக்கி நகர்றப்ப சந்திப்போம்.. வர்ட்டா.

KRS

Now you think about how my personal life is tied around AR Rahman’s experiment warranting a Sanga Tamizh precedence set by Kalamegan thus introducing you all to KRS anna and his kamban proficiency (and all the other characters in my story). You think about that alright? 🙂

[1] வெள்ளக்காரன் CERNனு தான் சொல்லுவான். ஏன்னா CERN – Conseil Européen pour la Recherche Nucléaire. Englishல அது பேரு The European Organization for Nuclear Research. வெள்ளக்காரன் EONRன்னா சொன்னான்? அதனால முகப்புத்தகம்னு சொல்றது.. அப்புறம் PETAக்கு வி.அ .பு .க  அது இதுனு ஆறுச்சாமி levelல எல்லாம் எறங்க வேணாம். பெட்டா’னு சொன்னாலே போதும். IMHO.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s