அடியே காதல் கண்மணி..

அறிவுஜீவியா இருக்கவனுக்கு பிரச்சனை பொதுஜன ரசிப்புத்தன்மைல அடங்குற விஷயங்கள இவனால ரசிக்க முடியாது..

அறிவுஜீவியா காமிச்சாகனும்னு நினைக்கிறவனுக்கு (insert beep sound) எதையுமே ரசிக்க முடியாது..

(அண்ணல் கருந்தேள் அறிமுகம் இங்கு என்றறிக)
http://tinyurl.com/jvqvobw

தன்னைத்தேடி வந்து நிற்கும் மனங்கவர்ந்தவனை கண்ட இந்தப்பெண் கண்ணில் காதல்.. ஒரு நொடி.. ஒரே நொடியில் கண்ணீராய் துளிர்த்து மறைகிறது.

“ஐயோ.. அம்மா.. என் காதல் எவ்வளவு புனிதம்.. கண்ணு தெரியாத அளவுக்கு கன்னாபின்னானு காதல் வருதே. நாக்கு, மூக்கு, காது (வான் கா பொறுத்தருள்க) எல்லாம் வெட்டியே ஆகணுமே”ங்குற அளவுக்குலாம் இங்க எவ(னு,ளு)மில்ல.. (நம்ம எழில் பையன் தவிர்த்து).

தன்னளவுக்கான ஒரு சமூகக்கரண்டியில் அளவு பாத்து, மனசும் நோகாம, வாழ்க்கையயும் பலி கொடுக்காம, ஒவ்வொரு அடியா அளந்து அளந்து ஒரு mysterious space கடந்த அப்புறமா அடைகொள்ளா காதல்.. இதான் இன்னிக்கு வழக்கம்.

நித்யா மேனன் கண்ணில் துளிர்த்த கண்ணீர் சட்டென்று திசைதிருப்பும் நொடியில் இவ்வளவு இருக்கிறது. Its not normal anymore to let your feelings known. ஒரு மாதிரி நேக்கான arranged love. இத படமா எடுத்தா “ஐயே.. அதே பழைய மேட்டர்பா”னு அய்யாச்சாமிஸ்..

ஒன்னு மட்டும் தெளிவா புரிது.. Recurring themes in Quentin Tarantino moviesனு சின்னதா thesis பண்ற இதே கும்பல்தான் இன்னாடா ஆயுத எழுத்து trainu, அலைபாயுதே sceneuனு அலம்பிட்டு திரிதுக.. lets not talk about the wannabes anymore. அத இந்த பதிவு போறவாக்குல பாத்துக்கும்.

ஒடம்பு முடியாத அம்மா அவரு வந்தா தான் எனக்கு நிம்மதின்னு சொன்ன நாள்ல இருந்து இன்னிக்குவர எங்க வீட்ல ஒரு காதல் கதைய நான் பாத்துட்டு இருக்கேன். அதுக்கு முன்னாடி எல்லாம் அம்மாக்கும் அப்பாக்கும் இவ்ளோ loveஆ’னுலாம் எனக்கு தெரியாது. அன்னில இருந்து நான் பாத்ததுல ஆகச்சிறந்த காதல் என்ன பெத்தவங்களுதுதான். நம்மள்ள பலர் இதே சந்தோசத்த அனுபவிச்சுருப்போம்.

பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் (சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது?) க்குள்ளார இருக்க காதல் அப்படி ஒரு வகை. இளையராஜா காலத்து romanticized romance. எனக்கும் – என் சார்ந்த சமூகத்து இளசுங்களுக்கு, காதலுக்கும் மேற்சொன்ன சமூகத்தயக்கத்துக்குமான இடைவெளில நடக்குற ஆண் – பெண் பரிமாற்றங்கள் சில இருக்கு. நித்யா மேனன் – துல்கர் சல்மான்கிட்ட அத பாக்கலாம். That is there to it. இது பழசுன்னா நீங்க புதுசா காதல் பண்ணுங்கடா அம்பி அத பதிவு பண்ணலாம்..

(SPOILER பத்தி ஜாக்கிரதை.
தன் ஆருயிர் காதல் மனைவிய பாத்துட்டு குடைய தூக்கி எறிஞ்சுட்டு பதறி ஓடின பிரகாஷ்ராஜ்னால, “என்னடாம்மா ‘ன்னு” அம்மாகிட்ட வாஞ்சையும் காதலும் கொட்டும் அப்பாவுக்காக யாருக்கும் தெரியாம கண்ணோரமா ஒரு துளி காதல் துளிர்க்குது, மரியாதை கலந்த பெருமை நிமித்தமா).

நித்யா மேனன் தோழியா வர்ற பொண்ணுகிட்ட கூட அவ்வளவு யதார்த்தம். நித்யா மேனன் சொல்லவே வேணாம். என் கிட்ட இருக்க samsung S6 frame வழியா பாத்தாலே அவ்வளவு அழகா இருப்பா. இதுல மணிரத்னம் சொல்லி, PCS அவரோட பிரம்மாஸ்த்துரதுல frame வச்சதுல இந்த நித்யா மேனன், ஷாலினி – ரேவதின்னு தேவதைகள் உறையும் ஒரு திவ்யதேசத்துல Green Card வாங்கிட்டா. நம்ம Vijay TV Ramyaவயே கண்ணு கூசாம பாக்க முடிதுன்னா பாத்துக்கோங்களேன்!!

துல்கர் சல்மான்கிட்ட ஒரு handsomeness இருக்கு. ஆனா classல பசங்கட்ட சங்காத்தமே வச்சுக்காத ஒரு character இருக்குமே? அந்த சாயல் தெரிது. நடிப்பு எல்லாம் பிரமாதம்தான். I guess the first father and son both to feature in MR’s films. அதுவே பாராட்டு தான்.

எங்க எல்லாம் முடியுதோ அங்க எல்லாம் எறங்கி அடிச்சுருக்கான் இந்த மென்சிரிப்பு maniac ARR.. Carnatic fused with dubstep / electrohouse படத்துல அங்கங்க தெளிச்சுவிட்ருக்கார் பாருங்க.. த்தா level. எப்பதான் படத்தோட OST வரும்னு இருக்கு..

ஒத்த மனுஷன் இந்த தமிழ் சமூகத்துக்கு pink floydஆகவும், metallicaவாகவும், Skrillexஆகவும், Coldplayஆகவும், qawwalisஆகவும், carnaticஆகவும் சதாவதாரத்துல அருள்பாலிக்கிறேர்.. ம்மா.. என்ன புண்ணியத்த பண்ணானுங்களோ இந்த தமிழனுங்க.. blessed with people like Raja, ARR, Valluvar, Kambar, RR Chozhan! எப்பா ராஜா ரசிகர்களா. புரியுது உங்க ஆதங்கம், உங்க ரசனை எல்லாம். அதுக்காக இப்படி ஒரு மனுஷன தரக்குறைவா பேசுறத நிறுத்திக்கங்க சொல்லிப்புட்டேன்.

இப்படி நான் பாக்குற காதல, காதலர்கள, என் வாழ்க்கைல இருந்து sample பண்ண celluloidஅ தந்ததுக்கு நன்றி MR.

Special accolades for choreographing the quintessential bickering couples go through when they don’t put all their feelings on the table. That kinda answers one more accusation. An artist can only record what he sees for us to be able to relate with the movie. பாலாக்கிட்ட போயி..  “நீ ஒரு international b-boy ஓட biopic எடுக்க மாட்டேன்ற. நீ போங்குனு சொல்ல முடியுமா?”. “யார்ரா நீ வக்காலி”ங்குற மாதிரி நக்கலா சிரிச்சுட்டே போயிருவார். இங்க கொரவலைய கடிச்சுவச்சுருவார்னு ஒரு theaterக்காக நான் சொல்லலாம். ஆனா உண்மைல இதுவரைக்கும் நமக்கு தெரிஞ்சு பாலா யார் கொரவளையயையும் கடிச்சதில்லையே? அதான் சாராம்சம்.

ராஜா, ரஹ்மான் விட்ட gapல Anirudh is godனு திரியற பக்கிங்க இதுங்க.. அந்த மாதிரி தான் காதல படமா எடுக்க Gowtham Menonனு சொல்லிட்டு திரியறதும். I have no other say in this matter.

You own this genre Manirathnam. This is an epic comeback. If this brilliant boy of yours, your Nandhan, is involved in this film, please let us know.. ரொம்ப நாளா அந்த பையன் பொதுவெளில என்ன பண்ணப்போறான்னு எதிர்பார்த்துட்டு இருக்கேன். Shut your wife up while you’re at it. Pretty please!

மத்தபடி என்ன கேட்டா இதான் சொல்லுவேன். எனக்கு ஆளு இருந்தப்போ / இல்ல futureல வர்றப்போ இந்த படம் வந்துருந்தா உஷிதமா இருந்துருக்கும். I would have been writing to her instead of this sinkhole I dug for myself. But then.. All of you people who are in love.. Go grab your SO and watch O Kadhal Kanmani.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s