சுஜாதாவிற்கு பின்

ஆறு வருஷம் ஆச்சு.. ஆசான் இல்லாம..

இளையராஜா ரஹ்மானை பாராட்டியபடியே “12 chromatic notes – ஸ்வரங்கள், 24 சுருதி இல்ல 27 சுருதியும் பாலமுரளிகிருஷ்ணா பாடிக்காட்டுவாரு. அந்த 12 ஸ்வரங்கள் – 27 சுருதிகளும் தான் 12 ராசிகள் –  27 நட்சத்திரங்கள்’னு” சொல்லிட்டு போயிட்டார். Musical Theoryயயும் Mathematical Theoryயயும்  இணைச்சு ஆயிரக்கணக்குல paper கெடக்கு.. பாக்கறதுக்கு விருப்பம் மட்டும் தான் வேணும்.. இதுல இசைக்கும் இந்திய வானவியல் சாஸ்திரத்துக்கும்னு போற போக்குல மொட்ட போட்ட முடிச்ச நாம எந்த முழங்கால்ல போயி அவுக்குறது? Wolfram Mathematica ல Bass, Harmony யோட கணிதவியல் செயல்பாட்ட பாக்க முடியும். வானவியல் சாஸ்திரத்துக்கு எங்க போறது?
http://www.youtube.com/watch?v=aoTqHceZeSg 

80,90கள்ல வெளிவந்த சிறுபத்திரிக்கைகளும் அதோட மொழி – கலாச்சார முக்கியத்துவமும் எல்லாருக்கும் தெரியும். ஏன்? ஆசானே கணையாழில சின்ன சின்ன சித்திரங்களுக்கா கைய பழக்கி தான பெரிய பெரிய கேன்வாஸ்லாம் தீட்டுனாறு? இலக்கியம் – சிறுபத்திரிக்கை – வெகுஜன பத்திரிக்கைக்கு இருந்த அந்த தொடர்போட நீட்சி தான் சினிமா – குறும்படம் – சின்ன பேனர் படம்னு தொடருது.. அதே மொழி – கலாச்சார தாக்கம். இத அனுபவிச்சு, இதுல கெளம்புற சிக்கல்கள அலசி, நல்ல படைப்புகள நமக்கு எல்லாத்துக்கும் அடையாளம் காட்டி அத ஒரு பதிவா பொதிஞ்சு வைக்க வேற யாரு இருக்கா? யாருக்கு தகுதி இருக்கு?

“ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டி போடா நீ..
லேட்டு லேட்டு லேட்டில்லாம லேட்டஸ்டாக வாடா நீ” மாதிரியான லஜ்ஜைகளையும், “ஐசக் அசிமோவ்-இன் இருதயம் நீயோ”னு நம்பிக்க தந்த மதன் கார்க்கி ‘யாகூ யாகூ பண்ணி பாத்தேன்’னு பரிதாபமா சரிஞ்சத சுட்டிக்காட்ட, அதுல இருந்து தமிழ் மக்களுக்கு Reductio Ad Absurdum மாதிரி ஏதோ ஒன்னு கத்து கொடுக்க யாரு இருக்கா? 

Blogosphere-அ உன்னிப்பா கவனிச்சு வந்தாரு.. printed media எழுத்தாளர்கள் அந்த பக்கம் வருவாங்கங்குரதையும் கணிச்சாரு.. ஆனா வந்தவிங்க ஊர் மானத்த, தன்மானத்த எல்லாம் 0s,1s ஆ கப்பல் ஏத்துறத பத்தி நக்கலடிக்கிற குசும்பு வேற எங்க கிடைக்கும்?

Higgs Boson க்கு பின்னால இருக்க தத்துவத்த, பௌதிகத்த பிச்சுப்போட்டு பார்சல் கட்ட அவரு இல்ல. Brout – Englert – Higgs mechanismல ஆயுத எழுத்து சூர்யா மாதிரி இந்தா புடிச்சுக்க அண்டத்தோட சிதம்பர இரகசியத்தனு Nobel வாங்குன Francois Englert தூக்கிப்போட்ட நீக்குழாய் (யூடுயூப்-னே சொல்லலாம் – தமிழ் தாங்கிக்கும்) பதிவ மணக்க மணக்க தமிழ்ல ஆத்தி கொடுக்க அவரு இல்ல.. 
http://home.web.cern.ch/about/updates/2014/02/nobel-laureates-formula-universe
“ஆசானின் அடிபற்றி அறிவியல் தமிழில்
போசானின் பிலாக்கணம் பகிர்ந்தேன் – பதிவுலகில் 
ஈசன் நிகர் பரப்ப(,) உறிஞ்சினர் 
நீசன்கள் ஹைட்ரோபிலி போலவே”
அப்படின்னு ஒரு நேரிசை வெண்பாவா பாடி மோதிரக்கைல குட்டு வாங்கிக்க வேற யாரிருக்கா?

அப்படியே “என் இனிய இயந்திரா”, “மீண்டும் ஜூனோ” ல தெரியற 2014 ஏ.ஐ சாத்தியங்கள (ANN Learning, Big Data) குறிப்பிட்டு சிலாகிச்சுருக்கலாம். ஜூனோ மக்கள் கிட்ட ஏற்படுத்தின அதே ஆர்வம் பொதிந்த பாசத்த சாத்தியமாக்குன Guy Hoffman பத்தி பேசிருக்கலாம். பாட்டு போட்டுட்டு அதுக்கு தாளமும் போடுற Robo, தானாவே திடீர்னு rapper ஓட தலையாட்டுதல படிச்ச Roboவ தமிழ்நாட்டு மக்கள பாக்க வச்சுருக்கலாம்.. http://www.youtube.com/watch?v=utV1sdjr4PY
அப்படியே George Orwell 1984 அ ஐசக் அசிமோவ்-குள்ள முக்கி எடுத்த சாமர்த்தியத்த பாராட்டி ஒரு வார்த்த பேசிருக்க என்னால முடிஞ்சுருக்க கூடாதா? 

ரம்யா கிருஷ்ணன் பேர மறக்கவே முடியாதபடி அந்த பேய் சிரிப்ப close-up ல காட்டுற reality show க்கள, பூனம் பாண்டேக்கள, அர்விந்த் கெஜ்ரிவாள்கள, அர்னாப் கோஸ்வாமிகள, ராகுல் காந்திக்கள topical ஆ கலாய்க்கிறதுக்கு authority அவருக்கு முன்னாலயும், பின்னாலயும் இல்லவே இல்ல.. 

அமெரிக்காவுக்கு படிக்க வந்துட்டேன் சார். பிரிவோம் சந்திப்போம்ல வர்ற அந்த பொறம்போக்குலாம் இப்போ இங்க இல்ல. வர்றதுக்கு முன்னால இந்தியாலேயே எந்த professor கிட்ட எந்த course, எந்த research’னு விசாரிச்சு, grades – RA – TA – Internship – Full timeனு ஒவ்வொரு அடியும் எண்ணி எண்ணி எடுத்து வைக்கிறோம். காதல் – காதல் போன்றவைகளுக்கு நேரம் ஒதுக்குரதில்ல. Fall break, Spring break ல Las Vegas, Strip Clubs முடிஞ்சா அதுக்கும் மேலன்னு போயிட்டு திரும்ப RA – TA க்கு திரும்பிர்றோம். தமிழ் சங்கம் ஒவ்வொரு stateக்கும் ஒண்ணுனு வச்சுகிட்டோம். University of California – Berkeleyல தமிழுக்குன்னு தனியா ஒரு துறை வச்சுகிட்டோம். அமேரிக்காகாரனுக்கு இந்தியால வடக்கு வேற தெற்கு வேறன்னு கத்துக்கொடுத்து அவன் தமிழா தெலுங்கான்னு கேக்குறான். “Are you from Anna University? – Bingo”னு சிரிக்கிறான். இதெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொண்டு போய் நையாண்டி பண்ண நீங்க இல்ல.. உங்கள் இன்மை உணர்கிறோம்.
அதுவேற.. உங்க கிட்ட மாட்டாத இந்த “I miss you” மதன் கார்க்கி கைல விழுந்தது. ஆனா இதுல எந்த paradigm லயும் வகைப்படாத superset sir நீங்க. உங்கள திரும்பவும் பாக்க முடிஞ்சா ‘தமிழ் கலைச்சொற்கள்’ பத்தி கொஞ்சம் பேசணும். முடிஞ்சா ‘Ion Implantation’ க்கு “மின் அயனி உட்பொதிவு முறை”ன்னு நான் பேர் வச்சத தம்பட்டம் அடிச்சு நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டுக்கணும். ஜிஞ்சர் பரிஸ் எப்படி redbullஆ monsterஆ ன்னு கேக்கணும். நீங்க விவரிக்க Gucci, Louis Vuitton peter பொண்ணுங்கள படிக்கணும். என்னமோ sir.. இயல், இசை, நாடகம் தாண்டி அறிவியலுக்குன்னு ஒரு நாலாம் தமிழ் வந்தா நீங்க தான் அதுக்கு அகத்தியர்..  
யாருக்கு என்ன புரியும்னு நீங்க கவலப்படாம “ஜி.எம். கவுண்ட்டர் அலறியது”ன்னு எழுதிட்டு போயிட்டீங்க.  உங்களுக்கு பின்னால பாருங்க. பாடப்புத்தகத்துல Geiger Muller கவுண்ட்டர் என்னனு படிச்சுட்டு பித்தம் தலைக்கு ஏறி ANN, Big Data, DNA Mappingனு மேஞ்சுட்டு வந்துட்டோம். எந்திரன் படத்துல எந்தளவு Garbage Valueனு கரிச்சு கொட்டுறோம். கண்டிப்பா மிச்ச இந்தியாவ விட சில விஷயங்கள்ல முன்னோடியாவே இருக்கோம். யாரு கண்டா? உங்க சிம்மாசனத்துல உக்கார ஒருத்தர அனுப்பிச்சு வைப்போம்.. அதுவர மங்கல்யான் 2, அக்னி 5 ன்னு இன்ஸ்டால்மென்ட் எல்லாத்துலயும் எங்கள நாங்களே படிப்பிச்சுகுறோம்..

Advertisements

2 thoughts on “சுஜாதாவிற்கு பின்

  1. நல்ல பதிவு. சுஜாதா அவர்கள் இருந்திருந்தால் மின் அயனி உட்பொதிவு என்பதில் “மின்” உபரி வார்த்தை, தேவையில்லை எனறு சொல்லியிருப்பார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s