கறுப்பு பேனா

யாருமற்ற வீட்டில் பூனைகள் தூங்கிக்கொண்டிருக்க எனக்கு மட்டும் விழிப்பு வந்தது
வெத்து காத்தில் அம்மாவை இருமுறை அழைத்தபின் எங்கிருந்தோ ஒரு நினைவு
மெல்லப்படர்ந்து வந்து சொன்னது, வீட்டில் எல்லாரும் வெளியே போயிருப்பதாய்.
தொண்டை தடவி காய்ச்சல் தேடி சிறிது நேரம் அழுதுபார்த்து பின்கட்டுக்கு ஓடினேன்
தாத்தாவின் பெட்டியருகில் கிடந்தது அந்த கறுப்பு பேனா..

அந்த பேனாவிற்கு நானே ஒரு சரித்தரம் எழுதிப்படித்தேன், நம்பிவிட்டது அந்த பேனா
பள்ளியில் பையன்கள் அனைவரும் அந்த வெள்ளைக்காரன் பேனாவை
தடவிப்பார்க்க நானும் வெள்ளைக்காரன் மிச்சம் வைத்த பெருமை சுமந்துதிரிந்தேன்
காலம் உருட்டிவிட ஓடி மறைந்துவிட்டது அந்த குண்டு பேனா
சிலபருக்களும், பார்வைகளும் கடந்த பிறகு திரும்ப வந்தது அந்த பேனா..

கறுப்பு மை ஊற்றி நுனிதுடைத்து குழுக்கி சேவகம் செய்தபின்
மெல்ல வெள்ளைத்தாளின் மீது ஊர்ந்து பழகியது பேனா..
சில கவிதை மாதிரிகள், ஆரம்பமே முடிந்து போன டைரிகள்
அப்பாவின் ஈகை அனைத்தும் பொறுத்தருள்ந்து  என் வசம் வந்தது பேனா..
படத்தில் பார்த்தது போல் எந்த வண்டும் தூக்கிப்பறக்காத பேனா..

இன்னும் பக்கங்கள் புரள, எனது நம்பிக்கை, தோல்வி, மீட்சி, காதல்
என அனைத்தையும் அருகிலிருந்து பார்த்த பேனாவின் மை மட்டும் தீர்வதாய் இல்லை
குப்பைக்கு போன தற்கொலை கடிதங்களை உற்பத்திக்கு அனுப்பிகொண்டிருக்கையில்
திடீரென ஒருநாள் எழுத ஆரம்பித்தது பேனா.. எந்த கரமும் பற்றாமலே..

சிறகு முளைத்தது போல தாள்கள் எங்கும்விரவி பாதம் பதித்து
வானவில் வண்ணங்களில் எழுதிக்கொண்டிருந்தது பேனா..
எழுத்தாளனாய் ஊர்மெச்ச படங்கள், பாடல்கள், இலக்கிய விழாக்கள்
என நான் எங்கு திரிந்தாலும் பைக்குள்ளே பத்திரமாய் இருந்த என் கறுப்பு பேனா..
நான் இறந்தபின்பு எழுதுவதை நிறுத்திவிட்டது..

Context:
Again, a pseudo-metaphoric, surreal / existentialistic attempt. The black pen being discovered synonymous to a lonely boy’s discovery of his writing skills. Perhaps, the pen itself, is a form of his writer persona. The self-invented history being the boy’s earlier attempts of his writing skills and a lie that supports his ability to write in English. After a period of chasing the worldly objectives, he rediscovers his writing skills post teenage. After being repeatedly turned down, He finally gets his own rhythm of writing which was being acknowledged. He was able to turn the darkness he felt into a write up that everybody likes.
Well I guess this should give enough idea about this poem-like free write up. Let me know..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s