வெளியேறி

ஒவ்வொரு நூலாய் சுற்றிவந்த வாழ்க்கை
கடைசிச்சுருக்கை இறுக்கிய தினம் இன்றும் நினைவில்

மெல்ல மெல்ல ஊர்ந்து தின்று களித்து பெருக்கிய
உறவு இறை மறை மதிப்பீடு எல்லாம் அற்றுப்போனபிறகு
வாழ்தலின் மீதான பிடிப்பை மீட்கப்புகுந்த அந்த
இறுதி முயற்சியையும் அடித்துச்சென்றது காலம்

பிள்ளை பேரன் மனையாள் எல்லாவற்றையும் அறுத்தெறிந்த மறதி
பெற்றவள் முகத்தையும் கொண்ட கணத்தில் விழுந்தது கடைசிச்சுருக்கு

மூப்பும் மூப்பு நிமித்தமுமான வலியும் தனிமையும்
மருந்தும் மாத்திரையும் வெறுப்பும் இரக்கமும் எரிச்சலும்
வரிசைக்கிரமாய் வந்து சேர்ந்த தினத்தில் உணர்தேன்..

வெளிக்கிட்ட காற்றை திரும்பப்பெறுவதின் அர்த்தமின்மையை!

கழிவிரக்கம் கொல்ல கண்ணோரம் படிந்த உப்புப்படிமம் கழுவி
நெஞ்சடைக்க மூச்சிழுத்து முகம் துடைத்து கண்ணாடி பார்க்க
தெரிந்து போனது கடைசி சுருக்கு விழுந்தே விட்டது என..

வெளியேறிய காற்று பை திரும்புதலின் வலி உணர்ந்தும்
மெனக்கெட்டதில்  தொக்கி நின்றது
உயிர் பிழைத்து கிடப்பதின் மீது நான் கொண்டிருந்த  காதல்

வாழ்க்கை என்னை சுற்றி கட்டிய கூட்டை உடைத்து
அழகியலின் வடிவெடுத்து படபடப்பாய் சிறகடித்து
பறந்தது என் உயிர்.. பட்டாம்பூச்சியாய்..

பின்னுரை :
இறந்தவன் தன் நினைவுகளை அசைபோட காலத்திற்கு முன்னும் பின்னுமாய் பயணிக்கிறது இந்த பதிவு.
Existentialism உம் Romanticism மாய் கலந்து எழுத நினைத்து எப்படியோ வந்து விட்டது.. Absurdism தொனிப்பதாய் தோன்றுகிறது.. what can I say.. I am biased..

பட்டாம்பூச்சி மறுபிறப்பாகவும், “வாழ்க்கை – கூடு, இறப்பு – மறுபிறப்பு” என்ற metamorphosis இன் metaphor ஆகவும் பயன்படுத்தி இருக்கிறேன்..
Age of Reason, Pulp இரண்டும் தொடர்ந்து படித்த பாதிப்பில் எழுதியது.. பார்க்கலாம்..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s