மயன் தலைமையகம் – இன்னும் 2 நாட்கள்

கட்டுரையாளர் இடுகை : இந்த பதிவை படிக்கும் முன் General Relativity, Time – Space continuum, Event Horizon, Einstein Rosen Bridge, Crystal Skulls, Electric Eel மீனின் செயல்பாட்டு முறைகள் முதலிட்ட செய்திகள் தெரிந்திருத்தல் நலம்.

//**அவசர ஒலிபரப்பு**//

அன்புடைய மக்களே
2012 வருடத்தில், மனித இனம் அறிவியில் மூலம் எய்திய சாகாவரம் பெற்று ஒரு தீர்வில்லா கொடிய போரின் கரங்களில் சிக்கித்தவித்தது. நீங்கள் அனைவரும் கடந்த வருடம் நாம் பௌதிக ஆராய்ச்சியில் எய்திய உன்னதத்தை அறிவீர்கள். நம்மால் ஒளி – புவியீர்ப்பு கட்டை உடைக்க முடிந்தது. அந்த ஆராய்ச்சியின் பயனாக நாம் அனைவரும் நமது வாழ்விடத்தை சுற்றியுள்ள புவியீர்ப்புவிசையை கட்டுப்படுத்துவதன் மூலம் முக்காலமும் உணரும் சக்தியை பெற்றோம். புவியீர்ப்பு மூலம் ஒளியின் பரிமாணத்தை கட்டுப்படுத்தி மூலத்திலிருந்து முடிவிலி நோக்கி நீளும் அதன் பயணத்தை நமது கண்கள் உணர்ந்து காலநேரம் என்னும் அமைப்பை நமது பயன்பாட்டிற்கேற்ப வளைக்கும் சக்தியை பெற்றோம். உங்கள் அனைவருக்கும் நமது ஒளிவு மறைவற்ற அறிவியில் – அரசியல் கொள்கைகள் தெரியும். அறிவியல் அனைவருக்கும் என்ற நமது கோட்பாட்டால் நமது அழிவை நாமே தேடிக்கொள்ளும்படி ஆனது. நம்மில் சிலர் ‘புவியீர்ப்பு – ஒளி’ சார்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேறு நூற்றாண்டில் வாழும் மனிதர்களை தொடர்புகொள்ள முயன்றனர். அவர்களுள் சிலர் இந்த சாகாவரம் பெற்ற மனிதர்களை வெற்றிகரமாக தொடர்பு கொண்டனர். தங்கள் யுத்தம் முடியும் வழி தெரியாத அந்த மனிதர்கள் இன்று அதே புவியீர்ப்பு – ஒளி தொழில்நுட்பத்தின் மூலம், அவர்களது அறிவியலை திருத்தியமைக்கும் பொருட்டு நமது வாழ்வியல் முறைகளை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கினர்.

அறிவியல் அனைவருக்கும் என்ற நமது கொள்கைகளில் ஆரம்பித்து நமது வாழ்வியலுக்கு பொருந்தாத பல மாற்றங்களை முன்னிறுத்த ஆரம்பித்தனர்.
அவர்களின் எண்ணம் நமது வளர்ச்சி விகிதத்தை முற்றிலும் குறைத்து அந்த கால இடைவெளியில் அவர்கள் தேடிக்கொண்ட அழிவில் இருந்து தப்பிக்கும் உபாயத்தை கண்டறிவது.

அவர்கள் நமது அறிவியல் அடிப்படை விதிகளை மாற்றும் முயற்சியில் இறங்கினர். அவர்கள் முன்னிறுத்திய உயிரற்ற அறிவியல் நமது வாழ்வியல் முறைகளுக்கு உகந்ததாய் இல்லை. எடுத்துக்காட்டிற்கு, சக்தி சேமித்து விநியோகிக்கும் தொழில்நுட்பம் என  உப்புத்தண்ணீர் – தகடுகளால் செய்யப்பட்ட ஒரு கருவி. நமது “உடலுறுப்பு சார் மின்னகம்” போன்ற சூழலியல் சார் தொழில்நுட்பத்திற்க்கும் அவர்கள் முன்னிறுத்திய உயிர்சூழலிற்கு பெருங்கேடு விளைவிக்கும் கருவிக்கும் “மலை – மடு” உவமையும் தோற்கும் அளவு வேறுபாடுகள். அவர்கள் நம்மை போன்ற திறந்த கொள்கையுடவர்களாய் இல்லை. நாம் பயன்படுத்துபவை போன்ற சீர்மிகு தொழில்நுட்பங்களை அதை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கையாளத்தெரிந்த ஒரு குறிப்பிட்ட இன  மக்களுக்கு  மட்டும் அளித்துவிட்டு மற்ற அனைவருக்கும் வேறு தொழில்நுட்பங்களை அளிக்கின்றனர். நாம் அறிந்தவரையில் நம்மிடம் இருந்து வளரும் சக்தி சார்ந்த தொழில்நுட்பமே அவர்களின் பேரழிவிற்கான ஆயுதத்தின் மூலம். நம்மை நமது தொழில்நுட்பத்தை கைவிட செய்வதன் மூலம் அவர்களின் சுய அழிவிலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள்.

இப்பொழுது இருதரப்பும் எந்த வித முடிவிற்கும் வர இயலாத தருணத்தில் நமது மயன்களின் கருத்து அறியும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதற்குள் அந்த நூற்றாண்டு மனித குலத்தார் ஒரு மாபெரும் அழிவு காரியத்தில் இறங்கிவிட்டனர். நமது  “உடலுறுப்பு சார் மின்னக” தொழில்நுட்பத்தின் மூலமாகிய “உடற்சூட்டை” கட்டுப்பாடு இழக்க வைக்கும் ஒரு புதிய கிருமியை அவர்கள் நமது உடலியக்கத்திற்குள் பரப்பினர். நமது தலைவர் மிடாஸ் அவர்கள் இந்த நாசக்கார செயலின் முதல் பலியென அறிகிறோம். ஒருபக்கம் அவரது மரபியல் விகாரம் அபாயகரமான உடற்சூடு  அளவுகளை தாங்கும் வகையில் மறுவடிவம் அடைந்தாலும், மறுபக்கம் அதீதமான சக்தி மூலத்தை கிரகிக்க தொடங்கியது. தன்னால் இயன்றவரை உடற்சூட்டிற்க்கு வேண்டுமான சக்தியை திரட்டிகொண்டிருந்த அவரது உடல் ஒரு கட்டத்தில் அயர்ச்சி அடைந்து விட்டது. நமது தலைவரின் கடைசி மூச்சு நின்றதும் அவர் உடலில் மிச்சமிருந்த சக்தி மூலமும், மரபியல் விகாரமும் அவரது எலும்பியல் அமைப்பை மின்காந்தப்புலம் சார்ந்த படிகார அமைப்பை ஒத்திருக்கும் வகையில் மாற்றமடைந்தது. பின் அந்த கிருமியின் செயல்பாடுகள் ஒரு கட்டுப்படுத்த முடியாத தொற்றுநோயாக மாறியது.

இந்த செய்தி உங்களது எதிர்வினையை வேண்டி நிற்கிறது. நமது பூமியை காக்கும் பொருட்டு இங்கேயே தங்கி 2000மாவது நூற்றாண்டு மனிதர்களை எதிர்கொள்வதா இல்லை எம்முடன் சேர்ந்து நட்சத்திரங்களுக்கு இடையேயான விண்வெளி போக்குவரத்தின் மூலம் “சீட்டஸ்” நட்சத்திர தொகுப்பில் உள்ள “தாவ் சீட்டி” கோள் தொகுப்பில் உள்ள மற்றொரு கிரகத்திற்கு மீள்குடியேற்றம் செய்வதா என்று. நமது நோய் கட்டுப்பாட்டு துறை இன்னும் இரு நாட்கள் தான் நமக்கு அளித்துள்ளது. நமது அறிவியல் அறிவு சார்ந்த பதிவுகளுக்கும் மீள்குடியேற்றம் பற்றிய பிறதகவல்களுக்கும் நமது எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு கருதி சுய அழிப்பு முறைகள் கையாளப்படுகிறது. இங்கு நீங்கள் தங்கி, இந்த புதிய நோயை எதிர்க்கும் வழிதெரிந்து, எதிர்கால மனிதர்களின் பிற மயன் இன அழிப்பு முயற்சிகளை முறியடிக்க முடிந்தால்; இந்த உலகம் December 22, 2012 அன்று அழியும் என்னும் செய்தியை மட்டும் காலம் கடந்து நிற்குமாறு செய்துவிட்டு நமது பிற அறிவுசார்  வளங்களையும், தடயங்களையும் அழித்துவிட்டு உடனே “தாவ் சீட்டி” க்கு புறப்படுமாறு கேட்டுகொள்கிறோம். உங்கள் முயற்சிகளுக்கு அண்டம் துணைபுரியட்டும்.

//**அவசர ஒலிபரப்பு**//

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s