அடையாள திருடர்கள்

பதில் சொல்லாதவன் பத்தாம்பசலியாம்

அடுத்தவன் பதில்திருடும் பத்தே வயதில்

மலரே  கருகும் ஏளன  மொழியில்

மொட்டைக்கருக்கும் முரடர் காடு

கராத்தே சாம்பியனும் நடன விற்பன்னனுமாய்

மனமழுந்த கிடக்கிறார்கள் அடையாளம்தேடி

இயலாமை வழியும் குரூரத்தின் நாவிற்கு

மதிப்பெண்  பத்தாதாம் அவர்தம்  மதிப்பிற்கு

கவிதை கொடுத்தல்தான்  காதல்  சான்றாம்

கவிதை நடையழகே அவனன்பின் அடைக்கும்தாழாய்

காதலனின் கவிதிறன்கண் காதலும் சுரக்குமென

இரவல் கேட்டலையும் ஒரு  இளைஞர்  கூட்டம்

சித்திமகன்  சேர்ந்தானென தானும் தவிக்கும்

பொறியியல்  புரியாதொரு பாமரகூட்டம்

படித்தவுடன் வேலையெனும் மாயச்சதுக்கத்தில்

புரவலர்தம் இருப்பினிலே காசை குவிக்கும்.

இலக்கியம் படிப்பதா?  ஆங்கிலத்தில் படிக்கவாம்

பொறியியல் பட்டமா? கணினிதான்  சிறப்பாம்

இளங்கலை கணிதமா? MBAதான் முடிவாம்

சினிமா டைரக்டரா? நாய் புத்தி காரணாம்

எங்கெங்கும் திரிகிறதோர் கயவர் கூடம்

விழுமியங்கள் வழியினிலே தொலைந்திட்ட  கூட்டம்

மந்தைவழி  திரிந்து பாடும் கிளி கண்டு

சிரிக்குதம்மா  சிறகொடிந்த சர்கஸ் கூட்டம்

Advertisements

One thought on “அடையாள திருடர்கள்

  1. இதைத்தான் செய்ய வேண்டும் என்று அடுத்தவன் சொன்னான் என சிலந்தி வலையில் சிக்கி கொள்ளும் இந்திய இளைஞனுக்கு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s